சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உட்பட்ட பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகரை அழகுபடுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சாலையோர பூங்காக்கள், சாலை திட்டுக்கள், மேம்பால சுவர்களை அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், சாலையோரங்களில் குப்பை, கட்டுமான கழிவுகள், மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டுவோர், சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகரில் உள்ள 18 சாலைகளை இன்று முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உட்பட்ட பொது இடங்களில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கும்முறையை அமலுக்குக் கொண்டுவரமுயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேலும், சென்னையில் போதுமான அளவிற்கு பொது கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.