வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் :செவ்வாய் கோளில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைத்துள்ளன. தற்போது முதல்முறையாக அங்கு ஒரு ஆறு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ செவ்வாய் கோளில் ஆய்வு செய்து வருகிறது.
இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள, ‘கியூரியாசிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள ‘ரோவர்’ எனப்படும் ஆய்வு வாகனம், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.அங்கு, ‘மவுன்ட் ஷார்ப்’ எனப்படும் மிகப் பெரிய மலை மீது கியூரியாசிட்டி ஆய்வு செய்து வந்தது.
![]() |
இந்த மலை பல கனிமங்களால் உருவானது தெரியவந்தது. மேலும், செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் நீர் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்தன.
இந்நிலையில், 18 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலையின் மறுபக்கத்துக்கு கியூரியாசிட்டி சென்றுள்ளது.
அங்கு, பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு ஆறு ஓடியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.இது குறித்து நாசாவின், கியூரியாசிட்டி திட்ட மூத்த விஞ்ஞானியான அஸ்வின் வசவாடா கூறியுள்ளதாவது:செவ்வாய் கோளில், முன்னொரு காலத்தில் ஆறு ஓடியுள்ளதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இது, நம் ஆய்வின் முயற்சிக்கு கிடைத்துள்ள புதிய தகவலாகும்.
அதாவது ஒரு ஆறு ஓடி, வறண்ட பின், அந்தப் பகுதியில் மணல் உள்ளிட்டவற்றை அரித்து சென்ற தடங்கள் தெரியும்.இதுபோன்ற தடங்கள் தற்போது கிடைத்துள்ளன. இது செவ்வாயில், பல நுாற்றாண்டுகளுக்கு முன், நீர் மட்டுமல்ல, ஆறு ஓடியுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement