திருமணத்தை மீறிய உறவு.. அசாம் இளைஞரால் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே, அசாம் மாநில இளைஞர் அரிவாளால் வெட்டியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அதே மாநிலத்தை சேந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜெகநாதபுரம் சத்திரம் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த துவர்க்கா பார் – சுமிதா பார் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் குட்லு என்ற  இளைஞருக்கும், சுமிதாபாருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சுமிதாபார் தனது 2 குழந்தைகளுடன் குட்லு வீட்டிற்கு சென்றதால், கடந்த 7ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த குட்லு 2 குழந்தைகளையும் கொன்றதுடன்,  அபெண்ணையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. சோழவரம் காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து குட்லுவை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.