அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் ஏற்பட்ட கட்ட இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர் பலியானார்.
மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 25 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இதில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தில் தரைமட்டமான மாலாடியா என்ற ஹோட்டலில் தங்கியிருந்த விஜயகுமார் என்ற இந்தியர் மீட்கப்பட்ட நிலையில் இன்று இறந்தார். அவர் குறித்த விவரம் அங்காரா நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement