தென்காசி மாவட்டத்தில் உள்ள கோகுலம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் செல்வ ரெங்கராஜ். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவருடைய செல்போன் வாட்ஸ்-அப்புக்கு சமீபத்தில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அதில் உள்ள லிங்கை செல்வரெங்கராஜ் கிளிக் செய்துள்ளார். அப்போது அவரது போனுக்கு ஒரு போனில் இருந்து அழைப்பு வந்தது. அதில் எதிர்புறம் பேசிய நபர் செல்போனில் வந்த கடவுச்சொல்லை கேட்டுள்ளார். செல்வ ரெங்கராஜூம் அந்த கடவுச்சொல்லை அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, செல்வ ரெங்கராஜ் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அடுத்தடுத்து நான்கு தவணைகளாக அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வரெங்கராஜ் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, தலைமை காவலர் ஜோஸ்பின் அருள் செல்வி வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.