நம்பிக்கை விருதுகள் 2022: "சமூகநீதி, சமத்துவத்துக்கு எதிரானவர்கள் அதிகாரத்தில் இருக்கக்கூடாது!"- திருமாவளவன்

திருநங்கை மர்லிமா முரளிதரனுக்கு விருது!

திருநங்கை மர்லிமா முரளிதரன், திருச்சி சிவா

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிடமிருந்து டாப் 10 மனிதர்களுக்கான நம்பிக்கை விருதைப் பெற்றார் திருநங்கை மர்லிமா முரளிதரன்.

“ஆண் மற்றும் பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் அவர்கள் விருப்பத்தில் வளரவிடுகிறார்கள். ஆனால், திருநர்களை அவர்கள் விருப்பத்திற்கு வாழ வைப்பதை அவமானம் என நினைக்கிறார்கள்!” – திருநங்கை மர்லிமா முரளிதரன்.

கௌரவிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா!

ஆதவ் அர்ஜுனா

“ஒரு இடத்துலகூட ரெக்கமெண்டேஷன்ல என் கையெழுத்து பட்டது இல்ல!” – தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா.

ஆதவ் அர்ஜுனாவை கௌரவிக்கும் வகையில் ஒரு பரிசை வழங்கினார், விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்.

விளையாட்டுக்கு மரியாதை!

போல் வால்ட் வீராங்கனை ரோஸிமீனா பால்ராஜுக்கு விருது

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர், அதவ் அர்ஜுனாவிடம் டாப் 10 இளைஞர்களுக்கான நம்பிக்கை விருதினைப் பெற்றார், போல் வால்ட் வீராங்கனை ரோஸிமீனா பால்ராஜ். அவர் போட்டியிலுள்ள காரணத்தினால் அவரது பெற்றோர் மேடையில் விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

பிரக்ஞானந்தாவின் தாயார், குகேஷ், அதவ் அர்ஜுனா
குகேஷ்
பிரக்ஞானந்தாவின் தாயார்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர், அதவ் அர்ஜுனாவிடம் டாப் 10 இளைஞர்களுக்கான நம்பிக்கை விருதினைப் பெற்றனர் செஸ் வீரர்கள் பிரக்ஞானந்தா, டி. குகேஷ். பிரக்ஞானந்தா சார்பாக அவரது தாயார் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

விழா மேடையில் கோகுல்ராஜின் தாயார்!

விழா மேடையில் கோகுல்ராஜின் தாயார்

“அரசு வக்கீலால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ப. பா. மோகன் அவர்களால்தான் நியாயம் கிடைத்தது. வாழ வேண்டிய மகனை இழந்திருக்கிறேன். ஒரு பெண்ணை கோயிலில் பார்த்ததற்காக என் மகனைச் சித்ரவதை செய்து கொன்றிருக்கிறார்கள். குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது. இப்படியானவர்களுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். சத்தியம் சாகாது. நீதி வெளிச்சத்திற்கு வரும். கோகுல்ராஜுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது.” – கோகுல்ராஜின் தாயார் பேச்சு

“மேல் முறையீட்டிலும் மோகன் வெல்வார். நீதி வெல்லும்!” – திருமாவளவன்

நம்பிக்கை விருதுகள் விழா மேடையில் திருமாவளவன்!

திருமாவளவன்

மேடையில் ஒரு வார்த்தையில் கேட்கப்பட்ட கேள்விக்கு திருமாவளவனின் பதில்கள்…

அம்மா: “பெற்ற பிள்ளையை உண்மை நேசத்துடன் நேசிக்க கூடியவள்.”

மொழி: “மனிதன் நாகரீகமடைந்தான் என்பதற்கான முதல் சான்று.”

தீண்டாமை: “தலைகுனிவு, அநாகரீகம், அருவருப்பு!”

2024: “எல்லா அதிகாரங்களை விடவும் மேலானது அரசியல் அதிகாரம். அந்த அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்க முடியும். சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்றிக்கு எதிரானவர்கள் அதிகாரத்தில் இருக்கக்கூடாது. அதற்கான சரியான களமாக 2024 இருக்கும் என நம்புகிறேன்.”

மனித உரிமை செயற்பாட்டாளர் ப. பா. மோகன், திருமாவளவன்
மனித உரிமை செயற்பாட்டாளர் ப. பா. மோகன், திருமாவளவன்

நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவனிடமிருந்து டாப் 10 மனிதருக்கான நம்பிக்கை விருதைப் பெற்றார், மனித உரிமை செயற்பாட்டாளர் ப. பா. மோகன்.

மேடையில் நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி!

நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி, பசுமை ஆர்வலர் ஸ்ரீகாந்த்

“அப்துல் கலாம் என் கணவருக்குக் கொடுத்த இலக்கு 1 கோடி மரக்கன்றுகள். காலம் அவருக்குத் தந்த அவகாசத்தில் அவர் நட்டியது 37 லட்சம் மரக்கன்றுகள்!” – நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி.

நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வியிடமிருந்து டாப் 10 இளைஞர்களுக்கான நம்பிக்கை விருதைப் பெற்றார் பசுமை ஆர்வலர் ஸ்ரீகாந்த்.

விருது பெற்ற எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின்!

எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின்

எழுத்தாளர் பெருமாள் முருகன், ஷங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி ஆகியோரிடமிருந்து டாப் 10 மனிதருக்கான நம்பிக்கை விருதை பெற்றார், நெய்தல் நில எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின்.

‘பெருந்தமிழர் விருது’ பெற்றார் எழுத்தாளர் பூமணி!

கவிஞர் மனுஷயபுத்திரன், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் ஆகியோரிடமிருந்து பெருமைமிகு ‘பெருந்தமிழர் விருது’ பெற்றார் எழுத்தாளர் பூமணி.

எழுத்தாளர் பூமணியிடம் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்.

1 லட்சம் ரூபாய்க்கான காசோலை பெற்ற எழுத்தாளர் பூமணி

“பூமணிக்கு விகடன் விருதும், விகடன் விருதுக்கு பூமணியும் அழகான பொருத்தம்!” – எழுத்தாளர் வேல ராம மூர்த்தி.

“எங்கயோ இருந்தேன், கண்டுபிடிச்சு இங்கக் கூட்டிட்டு வந்துட்டாங்க!” – எழுத்தாளர் பூமணி நெகிழ்ச்சி.

‘பெருந்தமிழர் விருது’ பெற்றார் எழுத்தாளர் பூமணி
‘பெருந்தமிழர் விருது’ பெற்றார் எழுத்தாளர் பூமணி
‘பெருந்தமிழர் விருது’ பெற்றார் எழுத்தாளர் பூமணி

அறிவியல் தமிழ்ப்பெண் – கலைச்செல்வி!

கலைச்செல்வி

டாப் 10 மனிதர்கள் பிரிவில் விருது பெற்றார், அறிவியல் தமிழர் டாக்டர் கலைச்செல்வி!

இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விருது விழா!

ஜேம்ஸ் வசந்தன் குழுவின் இசை நிகழ்ச்சி
ஜேம்ஸ் வசந்தன் குழுவின் இசை நிகழ்ச்சி
ஜேம்ஸ் வசந்தன் குழுவின் இசை நிகழ்ச்சி
ஜேம்ஸ் வசந்தன் குழுவின் இசை நிகழ்
ஜேம்ஸ் வசந்தன் குழுவின் இசை நிகழ்

ஜேம்ஸ் வசந்தனின் ‘தமிழ் ஓசை’ குழுவின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் – 2022.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.