பிரதமர் மோடியை சூசகமாக கலாய்த்த பஞ்சாப் முதல்வர்.!

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நோக்கமாக கல்வி மேம்பாடு இருந்து வருவதாக அக்கட்சி தெரிவித்துவருகிறது. மேலும் டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டெல்லி அரசுப் பள்ளிகளை பார்வையிட்டு தமிழகத்திலும் அதேபோன்ற மாடல் பள்ளிகள் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதேபோல் டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்களை, உலகில் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் பின்லாந்து சென்று பயிற்சி அளிக்க டெல்லி சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அதற்கு துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்பு தரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்தநிலையில், ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பள்ளி கல்விக்கு முன்னுரிமை என்றும், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளை, உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் நடந்த ஒரு நிகழ்வில் இருவரும் உரையாற்றினார். பஞ்சாபில் ஆசிரியர்கள் கற்பிப்பதைத் தவிர வேறு எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று பகவந்த் மான் உறுதியளித்தார்.

கெஜ்ரிவால் தனது உரையில், “நாங்கள் இங்கு பொறுப்பேற்ற போது, டெல்லியில் கல்வி முறையை மேம்படுத்துவது மற்றும் சரிசெய்வது மிகவும் கடினமாக இருந்தது. உள்கட்டமைப்புக்கு முன்னதாகவே உந்துதல் கொடுக்கப்பட்டது. பின்னர் ஆம் ஆத்மி அரசாங்கம் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தியது.

ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும் வரை, பாதிப்புகள் கண்ணுக்குத் தெரியாது. அரசாங்கம் விரும்பினால், அவர்கள் சிறந்த பள்ளிகள் மற்றும் கல்வியை கொடுக்க முடியும், ஆனால் நோக்கங்கள் மற்றும் முன்னுரிமைகள் முக்கியம். மேலும், கல்வி எங்கள் முன்னுரிமை. டெல்லி அரசுப் பள்ளிகள் மேம்பாட்டிற்கு எங்களுக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் பஞ்சாபில் அது குறைந்த நேரத்தை எடுக்கும் என்று நம்புகிறோம்.

டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்றுவோம்” என்று திரு கெஜ்ரிவால் கூறினார். பஞ்சாபிலும் கல்வி மேம்பாட்டு சோதனைகள் நடத்தப்படும், டெல்லி அதிலிருந்து கற்றுக்கொள்ளும்’’ என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.

சிங்கப்பூரில் பிப்ரவரி 6 முதல் 10 வரை தொழில்முறைப் பயிற்சி பெற்ற பஞ்சாப் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த முதல்வர்கள் குழு, இந்த நிகழ்வின் போது தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். முன்னதாக சிங்கப்பூரில் நடைபெற்ற தொழில்முறை ஆசிரியர் பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக 36 மாநில அரசுப் பள்ளி முதல்வர்கள் அடங்கிய முதல் தொகுதியை பிப்ரவரி 4ஆம் தேதி பஞ்சாப் முதல்வர் மான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

நகராட்சி தேர்தல் எதிரொலி; அரபி கல்வி வளாகத்தை திறந்து வைத்த பிரதமர்.!

பகவந்த் மான் கூறும்போது, ‘‘எந்த தேர்விலும் கலந்துகொள்ளாத தலைவர்கள், மாணவர்களுக்கு தேர்வுகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார்கள்’’ என்று கூறினார். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுகள் நடக்கும் போது, பிரதமர் மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.