ஜார்கண்டின், சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியது காங்கிரஸ்தான். நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ பேச்சு சுதந்திரம் இல்லை. பேசத் துணிபவர்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

2014-ம் ஆண்டு பணவீக்கத்தை தடுக்கும் வாக்குறுதியுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததிலிருந்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும், வறுமையும் அதிகரித்து வருகின்றன. எனவே, இதை காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று, மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையும், கொள்கைகளையும் மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்” எனப் பேசியிருக்கிறார்.