வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது ஓராண்டை கடந்துள்ள நிலையில், தற்போது இரு தரப்பும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் நீடித்து வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்ட அறிக்கை:
ரஷ்ய அதிபர் புடின் இந்த போரை நிறுத்த வேண்டும். புடினுடன், பிரதமர் மோடி பேசினால் உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியும். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement