‛‛வின்னிங் இந்தியா ‛‛இன்னிங்ஸ் வெற்றி| India beat Australia by an inning and 132 runs; lead four-match series by 1-0

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நாக்பூர் : ஆஸி., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதித்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 327 ரன் எடுத்து 144 ரன் முன்னிலை பெற்றிருந்தது. 8வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த ஜடேஜா (66), அக்சர் (52) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது.

3ம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் ஜடேஜா 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு , அக்சர் படேல் 84 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 400 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸி., அணி சார்பில் டாட் முர்பி 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

latest tamil news

இதையடுத்து இரண்டாவது இன்னிங்கிஸை துவங்கிய ஆஸ்திரேலியாவிற்கு இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தொல்லை கொடுத்தார். அந்த அணியின் நட்சத்திர போட்டியாளர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸிதிரேலியா அணி 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்தியா அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்கிஸ் வெற்றி பெற்றது.

latest tamil news

அஷ்வின் அதிகப்பட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஜடேஜாவுக்கு அபராதம்

latest tamil news

முதல் டெஸ்டில், ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதற்காக(லெவல்-1 ) இந்திய அணி வீரர் ரவிந்திர ஜடேஜாவின் சம்பளத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.