Thangalaan: பல நூறு வருடங்கள் கழித்து.. மாஸ் காட்டும் 'தங்கலான்' பட நடிகை.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் கவனம் ஈர்த்தவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சமூக பிரச்சனைகள் குறித்து பேசுபவை. கடைசியாக துஷாரா விஜயன், கலையரசன், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியிருந்தார் பா. ரஞ்சித். தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வருடம் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்தப்படங்களை தொடர்ந்து தற்போது ‘தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நடிகர் விக்ரமின் 61-வது படமாக உருவாகவுள்ள தங்கலானை பா.இரஞ்சித் இயக்குகிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக கடந்தாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்ற வருடம் துவங்கியது. ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் ‘தங்கலான்’ டைட்டில் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.மேலும் 3டியில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் ‘தங்கலான்’ பட கெட்டப்பில் நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEO: ‘லியோ’ படம் குறித்து மரண மாஸ் தகவல் சொன்ன அர்ஜுன்: தரமான சம்பவம் கன்பார்ம்.!

அதில், ‘தங்கலான்’ பட கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து “பல நூறு வருடங்கள் கழித்து அவள் என்னைக் கண்டுபிடித்தாள். அவள் என்னில் வசிக்கிறாள். அவள் தான் நான். மற்றும் நான் தான் அவள்” என கேப்ஷன் கொடுத்துள்ளார் பார்வதி. அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

5 மாநிலங்களில் 5 ஆடம்பர பங்களா.?: தனது சொத்து மதிப்பு குறித்து ராஷ்மிகா கொடுத்த அதிர்ச்சி.!

பான் இந்தியா படமாக உருவாகவுள்ள ‘தங்கலான்’ கேஜிஎப் பற்றிய உண்மை வரலாறை கூறும் விதமாக உருவாக்கப்படவுள்ளதாக பா. ரஞ்சித் ஏற்கனவே தனது பேட்டிகளில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்படம் விக்ரமின் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று ரஞ்சித் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.