வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கவுகாத்தி: அசாமில் இன்று(பிப்.,12) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

துருக்கி, சிரியா கடந்த சில தினங்களுக்கு முன் உலுக்கியது. இதை தொடர்ந்து இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ள நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று(பிப்.,12) லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
இது அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இது பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அச்சமடைந்த பகுதி மக்கள் பாதுகாப்பு கருதி சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement