சென்னை அருகே ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நூலக ஊழியராக பணிபுரிந்து வருபவர் மணியரசு. இவர் அதே பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மேலும், அவர் அந்த பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி, உல்லாசமாகமாகவும் இருந்து வந்துள்ளார்.
இதனால், இரண்டு முறை அவர் கர்ப்பமான அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஊழியரை வற்புறுத்தி உள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மணியரசு தற்போது கர்ப்பத்தை கலைத்து விடுவோம். பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதன் படி, அந்த பெண்ணின் கர்ப்பமும் கலைக்கப்பட்டது.
இந்த நிலையில், நூலக ஊழியர் மணியரசுக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியானது. இதையறிந்த பெண் ஊழியர் அவரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு மணியரசு அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுப்புத் தெரிவித்தும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் ஊழியர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிதுள்ளார். அந்த புகாரின் படி, மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஐ.பி.சி. சட்ட பிரிவுகளான கற்பழிப்பு, கர்ப்பத்தை கலைத்தல், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று மணியரசு வழக்கறிஞர் ஒருவரின் மூலமாக போலீசில் சரணடைந்தார். அதன் பின்னர் போலீசார் மணியரசுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.