காஞ்சிபுரம் / திருவள்ளூர்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,613 வழக்குகள் சமரசம் செய்து தீர்வு வங்கப்பட்டன. இதன் மூலம் ரூ.56.96 கோடி வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) பி.சிவஞானம் தலைைம தாங்கினார். நீதிபதிகள் பி.திருஞான சம்பந்தம், சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன், சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டன.
இதன் மூலம் தீர்வுத் தொகையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.9 கோடியே 42 லட்சத்து98,234 வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது விரைவு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுரு கன், பாலமுருகன் ஆகியோர் இருந்தனர். இதே போல் திருவள்ளூரில் மக்கள் நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான எஸ்.செல்வ சுந்தரி தொடங்கி வைத்தார்.
மொத்தம் 6,086 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 3,337 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.47.54 கோடி தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ரமேஷ் பாபு, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி,
தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேலாராஸ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் மூத்தஉரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன், சார்பு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் முகழாம்பிகை, சத்தியநாராயணன், செல்வ அரசி, பவித்ரா மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.