சேலத்தில் ஸ்டாலின்; ஒரே கல்லுல நாலு மாங்கா… திமுக உ.பி.,க்களுக்கு மெகா அசைன்மென்ட்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ”கள ஆய்வில் முதல்வர்” என்ற திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட வாரியாக பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் கொங்கு மண்டலத்தில் தனது கவனத்தை திருப்பவுள்ளார்.

ஸ்டாலின் பிரச்சாரம்தற்போது இந்த மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் தான் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த சூழலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
கொங்கு மண்டல செல்வாக்குஅதற்கு முன்னதாக கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளுக்கு ஒரு விசிட் அடிக்க இருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்படி, கொங்கு மண்டலத்தில் அதிமுக தான் செல்வாக்கு பெற்று விளங்குகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும் அதிமுக கூட்டணி வசமுள்ளது. ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் திமுக கூட்டணி 3 இடங்களை கைப்பற்றியது.​
அதிமுக vs திமுகதிருப்பூரில் உள்ள 6 தொகுதிகளில் திமுக 3 இடங்களை வைத்துள்ளது. சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒன்றில் (சேலம் வடக்கு) மட்டும் திமுக வெற்றி பெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 4ஐ கைப்பற்றியது. தர்மபுரியில் 5 தொகுதிகளும் அதிமுக வசமுள்ளது. கிருஷ்ணகிரியில் 5 தொகுதிகளில் திமுக கூட்டணி 3ல் வென்றது.
செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்இதனால் கொங்கு மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து திமுகவிற்கான ஆதரவை பெருக்கும் வகையில் ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக சேலத்தில் வீரபாண்டியாருக்கு பின்னர் செல்வாக்கு பெற்ற திமுக ஆளுமைகள் யாரும் உருவாகவில்லை. மாவட்ட செயலாளர்கள் ஆளுக்கொரு திசையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
சேலம் சுற்றுப்பயணம்இவர்களுக்கு இடையில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஒன்றுபட்ட திமுகவாக செயல்பட வேண்டும் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணம். அதற்காக வரும் 15, 16ஆம் தேதிகளில் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
திமுக நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட்சேலம் மாவட்டத்தில் நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் நான்கு (சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி) மாவட்ட அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அரசின் திட்டங்களை ஆய்வு செய்யும் வகையில் முதல்வரின் பயணம் இருந்தாலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ரகசியமாக பேச வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
​​
திமுக கோட்டைமுதல்கட்டமாக வரும் மக்களவை தேர்தலில் கணிசமான அளவில் வாக்கு வங்கியை பெற வேண்டும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்ற பெயரை திருத்தி திமுகவின் கோட்டையாக சேலத்தை மாற்ற வேண்டும். இதற்காக தற்போது முதலே தீவிரமாக செயல்படுவது அவசியம்.
அதிமுக மீது கண்மேலும் எடப்பாடியின் வலது கரமாக விளங்கும் இளங்கோவன் மீது ஒரு கண் இருக்கட்டும். திமுகவில் இருந்து அணி மாறுவதோ, வாக்கு வங்கியில் சரிவை சந்திப்பதோ ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே அதற்கேற்ப வியூகம் வகுத்து செயல்படுங்கள் என சேலம் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்ட உடன்பிறப்புகளுக்கும் அறிவுரை வழங்க வாய்ப்பிருப்பதாக பேசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.