ஆளுநர்கள் நியமனம் குறித்த செய்தி தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. மொத்தம் 13 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர்கள் நியமனம்
இதையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முதல்முறை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. முன்னாள் எம்.பி, மத்திய அரசின் பல்வேறு துறை சார்ந்த பொறுப்புகளை வகித்து வந்தவர். கோவை பாஜகவின் முகமாகவும், தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும் திகழ்பவர்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இவருக்கு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது மிகுந்த கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
குடியரசு தலைவர் மாளிகை உத்தரவு
அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட உத்தரவில்,
அருணாசலப் பிரதேச ஆளுநர் – லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் PVSM, UYSM, YSM (ஓய்வு)சிக்கிம் ஆளுநர் – ஸ்ரீ லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாஜார்க்கண்ட் ஆளுநர் – சி.பி.ராதாகிருஷ்ணன்ஹிமாச்சல் பிரதேச ஆளுநர் – ஸ்ரீ சிவ் பிரதாப் சுக்லாஅசாம் ஆளுநர் – ஸ்ரீ குலாப் சந்த் கடாரியாஆந்திரப் பிரதேச ஆளுநர் – எஸ்.அப்துல் நசீர் (ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி)சட்டீஸ்கர் ஆளுநர் – ஸ்ரீ பிஸ்வா பூஷன் ஹரிச்சந்தன் (ஏற்கனவே ஆந்திரப் பிரதேச ஆளுநராக பதவி வகித்தவர்)மணிப்பூர் ஆளுநர் – சுஷ்ரி அனுசுயா உய்க்யே (ஏற்கனவே சட்டீஸ்கர் மாநில ஆளுநராக இருந்தவர்)நாகாலாந்து ஆளுநர் – இல.கணேசன் (முன்னதாக மணிப்பூர் மாநில ஆளுநராக பதவி வகித்தார்)மேகாலயா ஆளுநர் – ஸ்ரீ பகு சவுகான் (ஏற்கனவே பிகார் மாநில ஆளுநராக இருந்தவர்)பிகார் ஆளுநர் – ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் (முன்னதாக ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக இருந்தார்)மகாராஷ்டிர ஆளுநர் – ஸ்ரீ ரமேஷ் பயாஸ் (முன்னதாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்தார்)லடாக் துணைநிலை ஆளுநர் – ஸ்ரீ பி.டி.மிஷ்ரா Brig. (Dr) (ஓய்வு)
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமங்கள் சம்பந்தப்பட்ட அலுவலங்களில் பொறுப்பேற்றதில் இருந்து அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.