வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட, டில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் வரும், பிப்.,16ம் தேதி நடத்துவதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கினையடுத்து மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு நடந்து முடிந்த, டில்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி 134 இடங்களிலும், பா.ஜ., 104 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இதையடுத்து, புதிய மேயரை தேர்வு செய்யும் விவகாரத்தில் முதல்வர் – கவர்னர் இடையே மோதல் போக்கு காரணமாக, ஜன.,6, ஜன.,24, பிப்.,6 என, மூன்று முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
![]() |
இச்சூழலில், மேயர், துணை மேயர் , மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்.16-ம் தேதி நடைபெறும் என துணைநிலை கவர்னர் சக்சேனா அறிவித்தார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது, இதில் பிப்.16 துணை நிலை கவர்னர் அறிவித்த தேர்தல் தேதியை ஒத்தி வைத்தும், அடுத்த விசாரணை பிப்.17 ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement