பெஷாவர் : பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; 22 பேர் படுகாயமடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வடக்கு வஜ்ரிஸ்தான் மாவட்ட கஜோரி சவுக் பகுதியில் பழங்குடியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டம் ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தங்களின் இருப்பிடத்திற்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்பிற்காக ராணுவ வீரர்கள் மற்றொரு வாகனத்தில் உடன் சென்றனர்.
அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய மற்றொரு வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் பலியாகினர்; பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த 15 ஊழியர்கள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement