Samantha: உடல்நலம் பெற பழனி முருகன் கோவில் படிகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த சமந்தா!

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.

சமந்தாசென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா. தெலுங்கு அப்பாவுக்கும் மலையாளி அம்மாவுக்கும் கடைக்குட்டி மகளாக பிறந்தார். சமந்தாவுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் உள்ளனர். சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த சமந்தா மாடலிங் மூலம் சினிமாத்துறைக்குள் நுழைந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கவுதம் வாசுதேவ் மேனனின் யே மாயா சேஸவே படத்தின் மூலம் சினிமா கெரியரை தொடங்கினார்.
​ Dada: ‘கண்ணீர் வரும் அளவுக்கு அழ வைத்தார்கள்’ கவினின் ‘டாடா’ படத்தால் உடைந்துப்போன சூரி!​
பாலிவுட்அதே ஆண்டு தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் நடிகை சமந்தா. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. தெலுங்கு சினிமாவில் சமீப காலமாக பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் சமந்தா, பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
​ Srushti Dange: கவர்ச்சிக்கு தாவிய சிருஷ்டி டாங்கே… ஹாட் க்ளிக்ஸ்!​
ஷாகுந்தலம்இதேபோல் ஹாலிவுட் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் புராதண கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ராணி சகுந்தலாவாக நடித்துள்ளார் நடிகை சமந்தா. மேலும் விஜய் தேவர கொண்டாவின் குஷி படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.
​ 41 வயதிலும் பிரமிக்க வைக்கும் சினேகா!​
மயோசிடிஸ் நோய்இந்நிலையில் அரிய வகை தசை அழற்சி நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்தார் சமந்தா. இதனால் தன்னால் படுக்கையில் இருந்து கூட ஒரு சில நாட்கள் எழ முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு கடுயைமான வலியை அனுபவித்து வருவதாகவும் உருக்கமாக கூறியிருந்தார். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை சமந்தாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
​ Pandian Stores: அப்போ ஆரம்பிச்சது… இன்னும் முடியல… பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை உருக்கம்!​
கதறி அழுத சமந்தாதொடர்ந்து தனது அரிய நோய்க்காக உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா. உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் படப்பிடிப்புகளில் பங்கேற்பதையும் புரமோஷன்களில் பங்கேற்பதையும் கடமை தவறாமல் செய்து வருகிறார். சில சமயம் தன்னையும் மீறி மேடை நிகழ்ச்சிகளில் கண்ணீர் அழுதுவிடுகிறார் சமந்தா.
​ Rajinikanth: வயசனாலும் ஸ்டைலும் அழகும் குறையல… பிளாக் அன்ட் பிளாக்கில் தெறிக்கவிடும் ரஜினிகாந்த்!​
பழனி முருகன் கோவிலில்இந்நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலில் உடல் நலம் பெற வேண்டி வழிபாடு செய்துள்ளார். பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. படி வழி பாதையில் நடந்து சென்ற சமந்தா 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்துள்ளார்.
​ Nayanthara: அடடே… சாக்லேட் பாய் நடிகருடன் முதல் முறையாக ஜோடி போடும் நயன்தாரா? ​
தீயாய் பரவும் வீடியோசமந்தா பழனி முருகன் கோவில் படிக்கட்டுகளில் கற்ரம் ஏற்றி வழிபாடு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்கள் நலம் பெருவீர்கள், நம்பிக்கையுடன் இருங்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகை சமந்தா சமீப காலமாக எப்போதும் கைகளில் ஜெப மாலையுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
​ Kiara Advani: திருமணம் ஆன கையோடு கியாரா அத்வானி எடுத்த அதிரடி முடிவு… ரசிகர்கள் அதிர்ச்சி!​
சமந்தா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.