கணவர் விபத்தில் சிக்கியதாக கூறிய வீட்டின் உரிமையாளர்..நம்பி சென்ற ராணுவ வீரரின் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்


இந்திய மாநிலம் ஹரியானாவில் ராணுவ வீரரின் மனைவியை வீட்டின் உரிமையாளர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ராணுவ வீரரின் மனைவி

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த 3ஆம் திகதி அவரது வீட்டின் உரிமையாளர், ராணுவத்தில் பணியாற்றும் குறித்த பெண்ணின் கணவர் விபத்தில் சிக்கியதாக அவரிடம் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து விவரங்கள் அறிய தனது வீட்டிற்கு வருமாறு அப்பெண்ணை அழைத்துள்ளார்.

இதனால் பதறிப் போன அவர் சற்றும் யோசிக்காமல் உரிமையாளரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கணவர் விபத்தில் சிக்கியதாக கூறிய வீட்டின் உரிமையாளர்..நம்பி சென்ற ராணுவ வீரரின் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் | Armyman Wife Raped By Rent House Owner Haryana

ஆனால், அங்கு அந்த நபர் குறித்த பெண்ணை தாக்கி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அத்துடன் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

உரிமையாளர் மீது புகார்

இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக குறித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கணவர் விபத்தில் சிக்கியதாக கூறிய வீட்டின் உரிமையாளர்..நம்பி சென்ற ராணுவ வீரரின் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் | Armyman Wife Raped By Rent House Owner Haryana

ராணுவ வீரரின் மனைவி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.