ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் தற்போதைய கடன் எவ்வளவு என நேற்று மக்களவையில் தெலங்கானா காங்கிரஸ் எம்.பி. உத்தம்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில், “தெலங்கானா மாநிலத்தின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தெலங்கானா மாநிலம் உருவானபோது அம்மாநிலத்தின் கடன்தொகை ரூ. 75,557 கோடியாக இருந்தது.
2021-22-ம் நிதியாண்டில் இதுரூ. 2,83,452 கோடியாக உயர்ந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.