“வடக்கனும் சக ஏழை தான்”… விஜய் ஆண்டனி பதிவுக்கு கொதிக்கும் நாம் தமிழர் தம்பிகள்!

Pichaikaran 2: சமீபத்தில் விஜய் ஆண்டனி ட்விட்டரில் பதிவு செய்த ட்வீட் ஒன்று இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அவர், “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்…   நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என ட்வீட் செய்து இருந்தார். இந்த ட்விட் மிகப்பெரிய அளவில் தற்போது ட்ரெண்ட் ஆகி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த ட்வீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்வீட் செய்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் ஆண்டனி  ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஷூட்டுக்காக லங்காவி தீவிவுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் படகில் செல்வது போன்ற காட்சியை எடுத்த போது எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் விஜய் ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அதன் பிறகு அங்கிருந்து சென்னை வந்த அவருக்கு பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தான் நலமாக இருப்பதாக அவரே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  பிச்சைக்காரன் 2 படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்போது விஜய் ஆண்டனியின் சமீபத்திய ட்விட்டர் பதிவி மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகியுள்ளது.  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வட இந்தியர்களுக்கு எதிராக ஆவேசமா பேசி வருகிறார், அதோடு வட இந்தியர்களால் பல குற்ற சம்பவங்களும், தமிழனுக்கான வேலை வாய்ப்புகளும் பறிபோவதாக குரல் எழுப்பி வருகிறார். இந்த சூழலில் விஜய் ஆண்டனி வட இந்தியர்களுக்கு ஆதரவாக பதிவிட்டது சீமான் ஆதரவாளர்களை கடுமையாக ட்ரிகர் செய்துள்ளது. 

vj

vj

அவர்கள் விஜய் ஆண்டனியின் அந்த ட்வீட்டின் கீழ் வட இந்தியர்கள் செய்த குற்றங்கள் பற்றி செய்திகளில் வந்த ஸ்கிரீன் ஷாட்டுகளை எடுத்து பதிவிட்டு வருகிறார்கள். அதோடு தன்னுடைய படத்தின் பிரமோஷனுக்காக தான் இப்படி ஒரு ட்வீட்டை விஜய் ஆண்டனி பதிவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஏடிஎம் கொள்ளை, நகைக்கடை கொள்ளை என அடுத்தடுத்து குற்ற சம்பவங்களில் வட இந்தியர்களின் பெயர்கள் அடிபடும் இந்த நேரத்தில் இந்த ட்வீட் தேவையா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் விஜய் ஆண்டனிக்கு ஆதரவாகவும் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். என்ன தான் இருந்தாலும், விஜய் ஆண்டனி தன் கருத்தை வெளியிட உரிமை உள்ளது எனவும், அவரது கருத்துக்கு எதிராக அவர் மீது இப்படி வன்மத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.