பள்ளிக்கல்வித்துறையில் தாய் மொழியை கட்டாயமாக வேண்டும் என பல்வேறு தரப்பட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தமிழ் மொழியை வளர்ப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும் அரசியல் கட்சி தலைவர்களும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் சில மாநிலங்களில் தாய் மொழி வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கல்வியில் தாய்மொழி கல்வி கட்டாயம் என சில மாநிலங்கள் அறிவித்துள்ளன.
ஆனால் தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறையில் தமிழ் வழி கல்வி கட்டாயமாக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் அண்மையில் தமிழை கட்டாயமாக்குவதில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தமிழ் மொழியை கட்டாயமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற உள்ள பள்ளி பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.