குருகிராம்,ஹரியானாவின் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், ‘ஆன்லைன்’ வாயிலாக வேலை தேடி வந்தார்.
இந்நிலையில், துஷார் சர்மா என்பவர், இவரை தொடர்பு கொண்டு வேலை தருவதாக உறுதி அளித்தார்.
பணியில் சேர நேர்காணல் நடத்த வேண்டும் எனவும், குருகிராமில் உள்ள வணிக வளாகத்திற்கு வருமாறும் துஷார் சர்மா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, அப்பெண் வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு, இளம்பெண்ணை வாகன நிறுத்துமிடத்தில் இருந்த தன் காரில், துஷார் சர்மா போதை மருந்து கலந்த பானத்தை தந்துள்ளார்.
இதைப் பருகிய அப்பெண் மயங்கிய நிலையில், துஷார் சர்மா அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியில் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
எனினும், அந்த இளம்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, தலைமறைவான துஷார் சர்மாவை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement