அண்டை நாட்டுக்கு தப்பிய உக்ரைன் ஜனாதிபதி: 140 மில்லியன் டொலர் சொத்துக்களை கைப்பற்ற சுவிஸ் நடவடிக்கை


உக்ரைன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமான 140 மில்லியன் டொலர் சொத்துக்களை கைப்பற்ற சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

மக்கள் போராட்டம்

இதன்பொருட்டு ஃபெடரல் நிர்வாக நீதிமன்றத்துடன் இணைந்து நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றில் சுவிஸ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அண்டை நாட்டுக்கு தப்பிய உக்ரைன் ஜனாதிபதி: 140 மில்லியன் டொலர் சொத்துக்களை கைப்பற்ற சுவிஸ் நடவடிக்கை | Ukraine Ex President Swiss Based Assets

@reuters

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி Viktor Yanukovich கடந்த 2014ல் மக்கள் போராட்டம் காரணமாக பதவியை துறந்தார். அத்துடன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் தப்பி சென்றார்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி, உக்ரைன் நிர்வாகமும் அந்த சொத்துக்களை தங்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்க உதவி கோரி வந்தது.

இந்த நிலையில் தற்போது சுவிஸ் அரசாங்கம் அந்த சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த நிலையில், சுவிஸ் நிர்வாகம் Viktor Yanukovich-ன் சொத்துக்கள் என அடையாளம் காணப்பட்ட 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பில்லான தொகையை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுத்தது.

130 மில்லியன் பிராங்குகள் 

ஆனால் தற்போது விரிவான விசாரணைக்கு பின்னர் 130 மில்லியன் பிராங்குகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், ஃபெடரல் நிர்வாக நீதிமன்றம் இறுதி முடிவு வெளியிடும் வரையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

அண்டை நாட்டுக்கு தப்பிய உக்ரைன் ஜனாதிபதி: 140 மில்லியன் டொலர் சொத்துக்களை கைப்பற்ற சுவிஸ் நடவடிக்கை | Ukraine Ex President Swiss Based Assets

@getty

மட்டுமின்றி, சுவிஸ் நிர்வாகத்தால் மீட்கப்படும் மொத்த தொகையும் சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் உக்ரைன் மக்களுக்கு உதவும் பொருட்டு தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ல் இருந்தே Viktor Yanukovich-ன் சொத்துக்கள் அனைத்தும் சுவிஸ் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த சொத்துக்களை மீட்க உதவும் வகையில் உக்ரைன் நிர்வாகமும் கோர்க்கை வைத்து வந்துள்ளது.
ஆனால் போர் தொடங்கிய பின்னர் நடவடிக்கைகள் முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.