Ak62, Lyca:டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லைகா: திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள்

Ak 62 update: லைகா நிறுவனத்தின் அப்டேட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

லைகாஎங்களின் #Production24 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் பிப்ரவரி 16ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் ட்வீட் செய்தது. அதை பார்த்த அஜித் குமாரின் ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். அஜித் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதனால் ஏ.கே. 62 படம் குறித்த அறிவிப்பு தான் வரப் போகிறது என்று அஜித் ரசிகர்களுக்கு நேற்று இரவெல்லாம் தூக்கமே இல்லை.
அப்டேட்காலையில் எழுந்ததில் இருந்து லைகா நிறுவன ட்விட்டர் பக்கமே கதி என்று இருந்தார்கள். ஏ.கே. 62 அப்டேட் வருது, இன்று திருவிழா தான் என்றார்கள் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் அறிவித்தபடி தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது லைகா. ஆனால் அது ஏ.கே. 62 படத்தினுடையது அல்ல. திருவின் குரல் பட போஸ்டர் ஆகும்.
வெளியீடு
போஸ்டர்ஹரிஷ்பாபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்து வரும் திருவின் குரல் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதை பார்த்த அஜித் ரசிகர்களால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. யோவ், துரோகி, ஏ.கே. 62 அப்டேட் விடாமல் திருவின் குரல் கேட்குதா உங்களுக்கு. எங்களை பார்த்தால் எப்படித் தான் தெரியுது. எங்களின் பொறுமைக்கும் ஒரு அளவுக்கு இருக்கிறது. சோதிக்காதீங்கய்யா என தெரிவித்துள்ளனர்.
கோபம்
நெட்டிசன்ஸ்அஜித் ரசிகர்கள் கடுப்பாகி கமெண்ட் போடுவதை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, அஜித் பட விஷயத்தில் லைகா நிறுவனமும் போனி கபூர் மாதிரியே நடந்து கொள்கிறது. போனி கபூர் தான் அவ்வளவு சீக்கிரத்தில் அப்டேட் கொடுக்க மாட்டார். ஆனால் லைகா அப்படி இல்லையே. அஜித் விஷயத்தில் மட்டும் ஏன் போனி மாதிரியே செய்கிறது. அஜித் ரசிகர்களின் ராசி அப்படி. அப்டேட் கேட்டு கதறுவதே அவர்களுக்கு வேலையாகிவிட்டது என்கிறார்கள்.
இயக்கம்ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். அவர் சொன்ன கதை பிடிக்காததால் நீக்கிவிட்டார்களாம். இதையடுத்து மகிழ் திருமேனி தான் ஏ.கே. 62 படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. ஏ.கே. 62 பட அறிவிப்பு கடந்த வாரமே வரும் என்றார்கள். ஆனால் இந்த வாரமும் முடியப் போகிறது. இன்னும் அப்டேட் வரவில்லை. அதனால் தான் அஜித் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

​AK 62:ஏ.கே. 62 படத்தில் யார் இருக்கார்னு பாருங்க: அவரே கொடுத்த மாஸ் அப்டேட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.