சென்னை: உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” தொழிலாளர்களின் தோழராகப் பொதுவுடைமைக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்த ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரின் பிறந்தநாள் இன்று. ‘புரட்சிப் புலி’யென வாழ்ந்திட்ட அவர் வாழ்வைப் போற்றுவோம். உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம்.” இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் தோழராகப் பொதுவுடைமைக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்த ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
‘புரட்சிப் புலி’யென வாழ்ந்திட்ட அவர் வாழ்வைப் போற்றுவோம்! உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம்! pic.twitter.com/oqC7VcF5sZ
— M.K.Stalin (@mkstalin) February 18, 2023