Cooku With Comali This Week: விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் நிறைவடைந்தது. 100 நாள்களுக்கும் மேலாக அந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை கட்டிப்போட்டு நிலையில், அவர்களை அப்படியே தக்கவைப்பதற்கு விஜய் எப்போதும் ஒரு பிளான் வைத்திருக்கும்.
அந்த வகையில், அந்த தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் பரந்துப்பட்ட பார்வையாளர்களை கொண்டதாக கருதப்படும் குக்கு வித் கோமாளி, பிக்பாஸ் முடிந்தவுடன் களமிறக்கப்பட்டது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த சீசனில், மேகா பட புகழ் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகை விசித்திரா, வெளிநாட்டவராக பல தமிழ் படங்களில் நடித்த நடிகை Andreanne Nouyrigat, வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சுமி தொடரில் ‘எழில்’ கதாபாத்திரத்தில் நடித்த VJ விஷால், நடிகர்கள் மைம் கோபி, காளையன், கிஷோர் ராஜ்குமார், கடந்த மூன்று சிசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
ஜீ.பி. முத்து, சிங்கப்பூர் தீபன், புகழ், மோனிஷா, மணிமேகலை, குரேஷி, சுனிதா, தங்கத்துரை, ரவீணா, சில்மிஷம் சிவா ஆகியோர் கோமாளிகளாக உள்ளனர். ஓட்டேரி சிவா முதல் வாரம் மட்டும் கோமாளியாக வந்திருந்தார்.
தொடர்ந்து, இந்த சீசனில் மூன்று வாரங்கள், 6 எபிசோட்கள் நிறைவடைந்துள்ளது. ஏழாவது, எட்டாவது எபிசோட்கள் இன்று ஒளிப்பரப்பாக உள்ளன. அந்த வகையில், கடந்த வாரம் போட்டியாளர் கிஷோர் ராஜ்குமார் எலிமினேட்டானார். மேலும், இந்த வாரம் இம்யூனிட்டி வாரம் என்பதால், இம்யூனிட்டி பேண்டை வாங்க குக்குகள் மத்தியில் இன்று கடும் போட்டியிருக்கும்.
இந்நிலையில், இந்த வாரம் எபிசோடின் படப்பிடிப்பின்போதே, ஒரு போட்டியாளர் பாதியில் வெளியேறியதாக தகவல் பரவிவருகிறது. அதாவது, நடிகை விசித்திராதான் அந்த போட்டியாளர் என்றும், படிப்பிடிப்பின்போது அவர் வெளியேறியதற்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை விசித்திராவின் தாயாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவருக்கு தகவல் வந்ததை அடுத்து அவர் படிப்பில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அவரின் தாயாரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவேதான், அவர் இம்யூனிட்டி பேண்ட் எபிசோட்டின் படப்பிடிப்பில் இருந்து பாதியில் சென்றதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வாரம் வெறும் 8 குக்குகளுக்கு மத்தியில்தான் இம்யூனிட்டி பேண்ட் போட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தனுஷின் ‘வாத்தி’ முதல் நாள் வசூல்: வேட்டையாடியதா… கோட்டைவிட்டதா…