போபால்: தென்னாப்ரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட 12 சீட்டாக்கள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. குவாலியர் அருகே உள்ள பூங்காவில் 12 சீட்டாக்களையும் மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் விடுவித்தார். பூங்காவில் ஏற்கனவே உள்ள 8 சீட்டாக்களுடன் புதிதாக கொண்டுவரப்பட்ட 12 சீட்டாக்களும் பராமரிக்கப்பட உள்ளன.
