12 நாட்கள் போராட்டம்: துருக்கி 278 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர்


துருக்கியில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட 45 வயது நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்புப் பணிகள்

பேரழிவு நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கியில் 200க்கும் குறைவான இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41,000க்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தினால் பலியாகினர்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், 14 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் நேற்று மீட்கப்பட்டனர்.

12 நாட்கள் போராட்டம்: துருக்கி 278 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர் | Man Rescued Who Survived 278 Hours Turkey

@AFP

278 மணிநேர போராட்டம்

இந்த நிலையில், சிரிய எல்லைக்கு அருகில் உள்ள தென் மாகாணமான ஹாடேயில் ஹக்கன் யாசினோக்லு என்ற 45 வயது நபர் மீட்கப்பட்டார்.

அவர் சுமார் 278 மணிநேரத்திற்கு பிறகு துருக்கிய மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டார்.

12 நாட்கள் போராட்டம்: துருக்கி 278 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட நபர் | Man Rescued Who Survived 278 Hours Turkey

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

12 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடிய நபரை மீட்டதால் மீட்புக் குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.