Manju Warrier: எல்லாம் அஜித் பண்ண வேலை… மஞ்சு வாரியர் செய்த காரியத்த பாருங்க!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பில் முன்னாள் மனைவியாவார். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர்.

Baakiyalakhsmi: புடவையை தூக்கி சொருகி… மொட்டை மாடியில் செம்ம ஆட்டம் போட்ட பாக்கியலட்சுமி ‘ராதிகா’!

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பைக்கில் சுற்றுவதை அதிகம் விரும்பும் நடிகர் அஜித், துணிவு படப்பிடிப்பின் போது வட மாநிலங்கள் மற்றும் தாய்லாந்தில் பைக்கில் சுற்றி வந்தார். அந்த பயணத்தில் துணிவு படத்தின் ஹீரோயினான மஞ்சு வாரியரும் இடம் பெற்றிருந்தார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

Bayilvan, Shakeela: முதல் ‘செக்ஸ்’ பத்தி ஏன் சொன்னீங்க? கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட ஷகீலாவை மடக்கிய பயில்வான்!

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டியது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து கடந்த மாதம் பைக் ஓட்டும் உரிமத்தை பெற்றார் மஞ்சு வாரியர். எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அதிகாரியிடம் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றார் மஞ்சு வாரியர். மஞ்சு வாரியர் ஓட்டுனர் உரிமம் வாங்கிய புகைப்படமும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.

Hansika Motwani: என்னது… எங்கம்மா எனக்கு அந்த ஊசி போட்டாங்களா? பதறும் ஹன்சிகா மோத்வானி!

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் விலையுயர்ந்த BMW பைக் வாங்கியுள்ளார். கொச்சி BMW ஷோ ரூமில் பைக் வாங்கிய மஞ்சு வாரியர் ஹெல்மெட் அணிந்தப்படி அதை ஓட்டியும் உள்ளார். அந்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதோடு தைரியத்தின் ஒரு சிறிய படி எப்போதும் ஒரு நல்ல இடம். நான் ஒரு நல்ல ரைடராக மாறுவதற்கு முன்பு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதனால் நான் சாலைகளில் தடுமாறுவதை நீங்கள் கண்டால், தயவுசெய்து பொறுமையாக இருங்கள். என்னைப் போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்த அஜித் சாருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். மஞ்சு வாரியரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.