சென்னை: கிருஷ்ணகிரி ராணுவவீரர் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக ஆட்சியை கண்டித்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி பேரணி நடத்தவிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பட்டப்பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், தி.மு.க. நிர்வாகியால் படுகொலை செய்யப்படுகிறார். சட்டமும், காவல்துறையும், தன்னை ஒன்றும் செய்யாது என்று படுகொலை செய்த நபர் கொக்கரிக்கிறார். இதை கண்டித்து […]
