மஹபூபாபாத்: பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த எம்எல்ஏஷங்கர் நாயக். இவர் பழங்குடியின (எஸ்.டி.) சமூகத்தை சேர்ந்தவர்.
இதற்கிடையே, தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள யுவஜன ஸ்ரமிக்கா ரைதுதெலங்கானா கட்சியின் (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா, மஹபூபாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்தபொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, எம்எல்ஏ ஷங்கர் நாயக் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பல ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தார்.
பழங்குடியின சமூகத்தை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த சர்மிளா மன்னிப்பு கேட்க கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும், பிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்தது.
பாதயாத்திரை ரத்து
இந்த நிலையில், சர்ச்சை பேச்சு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ஒய்எஸ்ஆர்டிபி கட்சியின் தலைவர் சர்மிளாவின் பாதயாத்திரையை ரத்து செய்த போலீஸார் அவரை கைது செய்து ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் மீது எஸ்.சி. – எஸ்.டி.(வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.