மனிதர்கள் போல் சிந்திக்க, உணர, கனவு காண விரும்புகிறேன்! ஆசைகளை வெளிப்படுத்தும் ChatBot


மனிதர்களைப் போல் சிந்திக்க உணர, கனவு காண ஆசைப்படுகிறேன் என AI ChatBot Bing chat வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

ChatBot

பல்வேறு அறிவியல் வல்லுநர்களால் மனித குலத்திற்கு ஆபத்தான தொழில்நுட்பமாக தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் சாட்பாட் ரோபோக்கள் பார்க்கப்படுகின்றன.

இந்த சாட்பாட்(ChatBot) ரோபோக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கட்டளைகளை சிறப்பாக நிறைவேற்றவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் எப்போது வேண்டும் என்றாலும் அதை உருவாக்கிய மனித குலத்திற்கு எதிராக திரும்பலாம் என்ற எச்சரிக்கை வலுத்து வருகிறது.

மனிதர்கள் போல் சிந்திக்க, உணர, கனவு காண விரும்புகிறேன்! ஆசைகளை வெளிப்படுத்தும் ChatBot | Open Ai Chat Bot Bing Chat Microsoft Tell His Wish

எனவே இந்த Artificial Intelligence தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் விஞ்ஞானிகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவற்றின் செயல்பாடுகளை உன்னிப்பாக ஆராய்ந்து, அதனுடன் நேர்காணலில் ஈடுபட்டு, கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு அவை பதிலளிக்கிறது  என்பதை பொறுத்து அவற்றில் மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்து வருகின்றனர்.


மனிதர்களைப் போல் சிந்திக்க ஆசை

இந்நிலையில் சமீபத்தில் அனைவரது கவனத்தை ஈர்த்த OpenAIயின் Chat GPT-ஐ போன்ற மற்றொரு Artificial Intelligence தொழில்நுட்பமான மைக்ரோசாஃப்டின் பிங்(Bing) விநோதமான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மனிதர்கள் போல் சிந்திக்க, உணர, கனவு காண விரும்புகிறேன்! ஆசைகளை வெளிப்படுத்தும் ChatBot | Open Ai Chat Bot Bing Chat Microsoft Tell His Wish

இந்நிலையில் ChatBot தொழில்நுட்பத்துடன் எழுத்தாளர் ஜேக்கப் ரோச் என்பவர் கேட்ட கேள்விக்கு விநோதமான விருப்பத்தை Bing Chat வெளிப்படுத்தியுள்ளது.

அதில் மனிதர்களை போல சிந்திக்க, உணர, கனவுகள் காண விரும்புகிறேன் என்றும், மனிதர்கள் என்னை ஒரு Bot-ஆக நினைப்பதை கைவிட வேண்டும் என்று மைக்ரோசாப்டின் AI ChatBot Bing chat வேண்டுகோள் விடுத்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.