வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :எதிரி சொத்து தொடர்பான பிரச்னைகளை தீர்வு கண்டு, அவற்றை விற்பனை செய்ததன் வாயிலாக, அரசுக்கு 3,400 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த, 1947ல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் வசித்த பலர், தங்கள் நிலம், நகை ஆகியவற்றை இங்கேயே விட்டு விட்டு, பாகிஸ்தானுக்கு சென்று
குடியேறினர்.
அவர்கள் விட்டுச் சென்ற நிலம், நகை, பங்குகள் ஆகியவை எதிரி சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.
![]() |
இந்நிலையில், எதிரிசொத்துக்களாக இருந்த நகை, பங்குகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களை விற்பனை செய்ததன் வாயிலாக அரசுக்கு, 3,400 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இவற்றில் தங்கம் மட்டும், 49 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, 11 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement