சென்னை: தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர், உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்
தொன்மையும் காலத்துக் கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய் மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்” என்று முதல்வர் கூறியுள்ளார்.