பாராளுமன்றம் நாளை (22) காலை 9.00 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன..
இன்றைய (21)பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ,தேர்தலை நடத்த கோரி ஆர்ப்பாட்ட சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.