பிரித்தானியச் சிறுமி விவகாரத்தால் சர்ச்சை: ஆவிகளுடன் பேசுபவரின் உதவியை நாடியுள்ள ஜேர்மன் இளம்பெண்


ஜேர்மனியில் வாழும், ஜூலியா (Julia Wendell, 21) என்னும் இளம்பெண், தான்தான் காணாமல்போன மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்னும் பிரித்தானியச் சிறுமி என்று கூறியிருந்தார்.

குழந்தையைத் தவறவிட்ட பிரித்தானிய பெற்றோர்

2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.

இந்நிலையில், ஜேர்மனியில் வாழும் ஜூலியா என்ற இளம்பெண், தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்றும், தன்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தன் காலிலுள்ள ஒரு அடையாளமும், தன் கண்ணிலிருக்கும் ஒரு புள்ளியும், தான் மேட்லினாக இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் என்று கூறியிருந்தார் அவர்.


எழுந்த சர்ச்சை
 

இதற்கிடையில், ஜூலியா, தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்று கூறியதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை உருவானது.

அவரது குடும்பத்தினர் அவர மீது கோபம் கொள்ள, சமூக ஊடகங்களில் மக்கள் ஜூலியாவைக் கடுமையாக விமர்சிக்கத் துவங்கியுள்ளனர்.

பிரித்தானியச் சிறுமி விவகாரத்தால் சர்ச்சை: ஆவிகளுடன் பேசுபவரின் உதவியை நாடியுள்ள ஜேர்மன் இளம்பெண் | Controversy Over British Girl Case

Image: iammadeleinemccann/instagram

ஆவிகளுடன் பேசுபவரின் உதவியை நாடியுள்ள ஜூலியா

தான் மேட்லினாக இருக்கக்கூடும் என கூறியதைத் தொடர்ந்து கடும் சர்ச்சை எழுந்ததால், Dr Fia Johansson என்னும் ஆவிகளுடன் பேசுபவர், குறி சொல்பவர், ஜோதிட நிபுணர் என பலமுகம் கொண்டவரின் உதவியை நாடியுள்ளார் ஜூலியா.

இது குறித்து Dr Fia Johansson வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ஜூலியா மீது வெறுப்பை உமிழ்வதை நிறுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அவரது பிரைவசிக்கு மரியாதை கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரித்தானியச் சிறுமி விவகாரத்தால் சர்ச்சை: ஆவிகளுடன் பேசுபவரின் உதவியை நாடியுள்ள ஜேர்மன் இளம்பெண் | Controversy Over British Girl Case

Image: PA

தான் ஜூலியா கூறிய விடயம் குறித்த விசாரணையைத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள Dr Fia Johansson, ஜூலியாவின் மன நிலை இப்போது நன்றாக இல்லை என்றும், ஆகவே அவரை தொந்தரவு செய்யவேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த Dr Fia Johansson, காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க பொலிசாருக்கு உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பிரித்தானியச் சிறுமி விவகாரத்தால் சர்ச்சை: ஆவிகளுடன் பேசுபவரின் உதவியை நாடியுள்ள ஜேர்மன் இளம்பெண் | Controversy Over British Girl Case

Image: iammadeleinemccan / Instagram





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.