சென்னை: சமூக வலைதள தகவல்களை பார்த்து வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், பொது இடங்களில் தனிப்பட்ட, மொழி வாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது என ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறினார். தமிழ்நாட்டில் சமீக நாட்களாக வடமாநிலத்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எந்தவித முன்யோசனையும் இன்றி வடமாநிலத்தவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால், வடமாநிலத்தவர்கள் இல்லையென்றால், தமிழ்நாட்டின் வர்த்தகம் முடங்கி விடும், […]
