டெல்லி: இந்தியாவில் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெட்ரோலில் எத்தனால் கலப்பில் நிர்ணயிக்கப்பட்டதற்கு முன்பே இந்தியா இலக்கை எட்டியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகச் சங்கிலியை பல்வகைப்படுத்துகிறது. இந்த பட்ஜெட் மூலம், பசுமை முதலீட்டாளருக்கு இந்தியா சிறந்த வாய்ப்புகளை வழங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். 2030-க்கு முன்பே 2026-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை நாடு அடைந்துவிடும் என பிரதமர் தெரிவித்தார்.
நமது பசுமை எரிசக்தி திறனை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதில் ஒரு கட்டளை நிலையை உருவாக்கினால், உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்தியாவால் கொண்டு வர முடியும். பசுமை எரிசக்தி தொழிநுட்பத்தில் உலகிற்கு தலைமை தாங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என பிதாமற் மோடி கூறியுள்ளார்.