ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தமிழக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாளையும், நாளை மறுநாளும் ஈரோடு தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரு தெருவாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கார் மூலம் ஈரோடு வருகிறார். அங்கு தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து தொகுதி நிலவரங்களை கேட்டறிந்த பின்னர, மறுநாள் சனிக்கிழமை காலையில் தெரு தெருவாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு :-
சனிக்கிழமை காலை
பேசும் இடம் – சம்பத் நகர் (காலை 9 மணி),
வழி- பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு, பஸ் நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி.
பேசும் இடம்-காந்தி சிலை (காலை 10 மணி),
வழி-கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு.
பேசும் இடம் – அக்ரஹாரம் (காலை 11 மணி),
வழி- பூம்புகார் நகர், காந்தி நகர், வில்லரசம்பட்டி.
சக்தி சுகர்ஸ் (தங்குதல்) மதியம்
சக்தி சுகர்ஸ், சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி,
பேசும் இடம் – முனிசிபல் காலனி (தலைவர் சிலை) (மாலை 3 மணி) வழி-மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா.
பெரியார் நகர் (மாலை 3.45) அதன்பிறகு சக்தி சுகர்ஸ்