டெல்லி: டெல்லி வரும் போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார், அதன்படி இன்று அவரை சந்தித்தேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் விலக்கு கேட்ட போது பிரதமர் மோடி சில விளக்கங்களை அளித்தார்: நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பிரதமரிடம் தெரிவித்தேன். கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பை தருமாறு பிரதமரை கேட்டுக் கொண்டேன். மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன் இவ்வாறு கூறினார்.
