வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ஐ.நா. குழு கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதி பங்கேற்று பேசினார்.
பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், தான் கைலாசா நாட்டில் இருப்பதாகவும் தனியாக ஒரு தீவை வாங்கி, அதற்கு கைலாசா என பெயர் சூட்டி, தனி பாஸ்போர்ட், பணம், வங்கி என அனைத்து சேவைகளையும் ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
![]() |
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நெவார்க் நகரம், கைலாசா நாட்டை அங்கீகரித்து இருதரப்பு ஒப்பந்தத்தில் கடந்த ஜன. 13-ம் தேதி கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நெவார்க் நகர மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக, கலாச்சார உரிமைகள் குழு கூட்டம் ஜெனீவாவில் கடந்த பிப்.24-ல் நடந்தது. அதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் இன்று வெளியானது.
கூட்டத்தில் கைலாசா நாடு சார்பில் பெண் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது, ஹிந்து மதத்தின் புராதன மரபுகளை புதுப்பித்ததற்காக தான் பிறந்த நாட்டில் நித்யானந்தா துன்புறுத்தப்பட்டார். ஹிந்து மத தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement