கடலூரில் முதலாவது புத்தகக் கண்காட்சி: மார்ச் 3ஆம் தேதி தொடக்கம்

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் 2022- 23 ஆம் ஆண்டிற்கான பொது வரவு செலவு திட்டத்தின் போது  முதலமைச்சர், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும் என அறிவித்தார். இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்டத்தில் முதன் முறையாக 100 அரங்குகள் கொண்ட பிரமாண்ட புத்தகக் கண்காட்சி வரும் மார்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வேளாண்மை, உழவர் நலன்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும்  தொழிலாளர் நலன்திறன் மேம்பாடுதுறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசுடன் இணைந்து தெண்னியந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. புத்தகக் கண்காட்சி மார்ச் 3 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 12ஆம் தேதி வரை கடலூர் மாநகராட்சி பகுதியில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த புத்தகக் கண்காட்சி காலை 10.00 மணி முதல் தொடங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் இதர உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் இலக்கியவாதிகள், கலை பண்பாட்டுத்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் இசைப்பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளன. மேலும் இதில் சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் பட்டிமன்றம் ஆகியவை தினசரி மாலை 6.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.