கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை அடுத்த சின்னகரட்டூர் பகுதிக்கு இன்று காலை வனப்பகுதியில் இருந்து தண்ணீரைத் தேடி 2 வயது ஆண் புள்ளிமான் வந்தது. அங்குள்ள சடையன் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணத்தில் புள்ளிமான் தவறி கீழே விழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, 30 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் இறங்கி மானின் கண்களை கட்டி பாதுகாப்பாக கயிறு கட்டி மேலே தூக்கி வந்தனர். அதிர்ஷ்டவசமாக புள்ளிமான் எவ்வித காயமும் இன்றி தப்பியது. இதையடுத்து புள்ளிமானை வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். அவர்கள் மானைகாட்டிற்கு கொண்டு சென்று விடுவித்தனர்.