நொய்டா:உத்தர பிரதேசத்தில், மின்சார ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட பட்டாசுகள் மீது, வெடிக்கப்பட்ட பட்டாசு விழுந்த விபத்தில், பலத்த காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரியில், ஜகன்னாத் ஷோபா யாத்திரை நேற்று முன்தினம் நடந்தது.
இந்த யாத்திரையின்போது, மக்கள் பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். இதற்காக, மின்சார ஆட்டோவில் பட்டாசுகள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, அங்கு சல்மான் என்பவர் வெடித்த பட்டாசு, ஆட்டோவில் உள்ள பட்டாசு பெட்டிகள் மீது விழுந்து ஆட்டோவே வெடித்து சிதறியது.
இதில், சல்மானும் ஆட்டோ டிரைவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சல்மான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பட்டாசு ஏற்றிச் சென்ற ஆட்டோ தீப்பிழம்பு போல வெடித்து சிதறிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement