புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்! 31 நாட்களுக்கு பிறகு அமேசான் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நபர்


அமேசான் காடுகளில் தொலைந்து போன 30 வயதான ஜொனாட்டன் அகோஸ்டா என்ற நபர், புழுக்களை சாப்பிட்டும், மழை நீரை குடித்தும் உயிர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

அமேசான் காட்டில் தொலைந்து போன நபர்

ஜொனாட்டன் அகோஸ்டா(30) என்ற நபர் தனது நான்கு நண்பர்களுடன் வடக்கு பொலிவியாவில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது காட்டில் பிரிந்து சென்று தொலைந்து போகியுள்ளார்.

இதையடுத்து முடுக்கி விடப்பட்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து, ஜொனாட்டன்(Jhonattan Acosta) அகோஸ்டா 31 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்! 31 நாட்களுக்கு பிறகு அமேசான் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நபர் | Amazon Jungle Missing Man Survival BoliviaReuters 

அகோஸ்டா காணாமல் போகி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மட்டும் 17 கிலோ எடையை இழந்துள்ளார்.

மேலும் உள்ளூர் மற்றும் நண்பர்களை கொண்ட ஒரு தேடல் குழுவால் கண்டுபிடிக்கப்பட்ட போது, அவர் கணுக்கால் சிதைந்த நிலையில் நீரிழப்புடன் காணப்பட்டார்.


புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்

இந்நிலையில் தான் உயிருடன் மீட்கப்பட்டது தொடர்பாக கண்ணீருடன் பேசியுள்ள அகோஸ்டா, “இது நம்பமுடியாதது, மக்கள் நீண்ட காலமாக தேடலைத் தொடர்ந்தனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை,”  என்று தெரிவித்துள்ளார்.

புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்! 31 நாட்களுக்கு பிறகு அமேசான் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நபர் | Amazon Jungle Missing Man Survival Bolivia

அத்துடன் “நான் புழுக்களை சாப்பிட்டேன், பூச்சிகளை சாப்பிட்டேன், என்னுடைய காலணிகளில் சேகரிக்கப்பட்ட மழை நீரைக் குடித்தேன், அந்த நேரத்தில் உயிர் வாழ நான் செய்ய வேண்டி இருந்த அனைத்தையும் நீங்கள் நம்ப மாட்டீர்கள்” என குறிப்பிட்டுள்ளார் .

மேலும் “கடவுளுக்கு நான் மிகவும் நன்றி, ஏனென்றால் அவர் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுத்தார்.” எனவும் தெரிவித்துள்ளார்.

31 நாட்களுக்கு பிறகு மீட்பு

ஜொனாட்டன் அகோஸ்டா தொலைந்து போன 31 நாட்களுக்கு பிறகு, 300 மீ தொலைவில் தேடுதல் குழு ஒன்றை கண்டுள்ளார், அதனை தொடர்ந்து முட்கள் நிறைந்த புதர்கள் வழியாக அவர்களை நோக்கி நொண்டியடித்து கொண்டு வந்து அவரது கவனத்தை ஈர்க்க கத்தியுள்ளார்.

புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன்! 31 நாட்களுக்கு பிறகு அமேசான் காட்டில் இருந்து மீட்கப்பட்ட நபர் | Amazon Jungle Missing Man Survival BoliviaReuters 

இதற்கிடையில் அவர் எப்படி கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றார் என்பதை  புரிந்து கொள்வதற்காக உயிர் பிழைத்தவரின் நான்கு நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.