விண்ட்ஸர் அரண்மணையை விட்டு வெளியேறினர் ஹாரி-மேகன் தம்பதியினர்| Harry-Meghan couple left Windsor Castle

லண்டன்: பிரிட்டனின் விண்ட்ஸர் அரண்மனையிலிருந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கெல் தம்பதியினர் வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன் மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’ நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில் 2018ல் திருமணம் செய்து கொண்டார். அரண்மனையில் வசித்து வந்த அவர்கள், 2019ல் அரச குடும்பத்தைவிட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் குடியேறினர்.

இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபதெ் மறைவு காரணமாக பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக , மீண்டும் அரண்மணைக்கு வந்து அண்ணன் வில்லியம், கேட் தம்பதியுடன் விண்ட்ஸர் அரண்மணையில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று விண்ட்ஸர் அரண்மணையை விட்டு ஹாரி -மேகன் தம்பதியினர் வெளியேறிவிட்டதாக அரண்மணை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் பிரிந்த குடும்பம் ஒன்றாக சேரும் என எதிர்பார்த்த நிலையில் விண்ட்ஸர் அரண்மணையை விட்டு ஹாரி -மேகன் தம்பதியினர் திடீரென வெளியேறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.