Rahul Gandhi: மேகாலயாவில் மட்டும் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்த மர்மம் இது

Meghalaya election results March 02: பிப்ரவரி 27 அன்று  நடைபெற்ற மேகாலயா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கவுள்ளது. காலை எட்டு மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கவிருக்கும் நிலையில், மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்கள் வாக்கே மகேசன் வாக்கு என்பதால், ஜனநாயக நாட்டில் தேர்தல் நாயகர்களாக கோலோச்சுவது வாக்களர்களின் வாக்கு என்னும் சக்தி.

மேகலயாவும் காங்கிரஸ் கட்சியும்

மேகாலாய சட்டமன்றத் தேர்தல் 2023இல், 77.9% வாக்காளர்கள் வாக்களித்தனர். மேகாலயாவில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு ஓங்குமா? அல்லது காங்கிரஸ் சாதகமான நிலையை ஏற்படுத்துமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

மேகாலயா தேர்தல் முடிவுகள்
அனைத்து கருத்துக்கணிப்பு கணிப்புகளின்படியும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில், மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா ஏற்கனவே கூட்டணி ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தனது கட்சி ஆட்சி அமைப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் திறந்தே வைத்திருக்கும் என்று கான்ராட் கே சங்மா  கூறினார்.

“நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் மனம் திறந்து ஏற்றுக்கொள்வோம். கடந்த முறை பெற்றதை விட அதிக இடங்களைப் பெறுவோம் என்று எதிர்பாக்கிறோம். அதனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சங்மா கூறினார்.

மேகாலயாவில் மம்தா பானர்ஜி

மேகாலயாவில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் நுழையும் என்று கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. காங்கிரஸைத் தவிர TMC ஒரு வலுவான எதிர்க்கட்சியாக மாறக்கூடும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றனர்.  

மேகாலயாவில் ராகுல் காந்தி
அண்மைக் காலங்களில், சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்வதில்லை. அதில் இருந்து சற்று மாறுபட்டு, ராகுல் காந்தி  மேகாலயாவில் மட்டும் தேர்தல் பேரணி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பழங்குடியின வாக்குகள் யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறது என்பதை இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துக் கொள்ளலாம். ராகுலின் பிரச்சார உத்திக்கு பலன் கிடைக்குமா? என்ற கேள்வி பலரின் மனதில் உள்ளது.

2023ல் 6 சட்டசபை தேர்தல்கள் 
மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்து, இன்னும் சில மணி நேரத்தில் முடிவுகளும் வெளியாகிவிடும். இந்த ஆண்டில், வேறு  6 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு மே 2023ல் தேர்தல் வரவுள்ளது. அதன்பின் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெறும். தொகுதிகள் நிர்ணயிக்கும் எல்லை வரையறைகள் இந்த ஆண்டுக்குள் முடிந்தால், 2023ல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலையும் நடத்தலாம்.என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.