லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் பணிகள் ஆரம்பமாவதற்கு முன் இருந்தே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காத்திருந்தது.
காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிரில் படக்குழுவினர் ‘லியோ‘ படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இங்கு படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
ஏற்கனவே படத்தில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்த தகவல்களும் வெளியானது. அதன்படி படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி, மேத்யூ தாமஸ், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படம் பெரியளவில் நட்சத்திர பட்டாளங்களை கொண்டு உருவாகிறது.
இதில், மிஷ்கினின் பாகம் முழுவதும் படமெடுக்கப்பட்டு விட்ட நிலையில், மிஷ்கின் சில நாள்களுக்கு சென்னை திரும்பினார். மேலும், படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்திருந்தார். அதில், நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலரையும் பாராட்டி அறிக்கைவிட்டிருந்தார். அதில், படத்தின் ஆக்சன் காட்சிகளையும் சிலாகித்து மிஷ்கின் எழுதியிருந்தார்.
#Leo – #Mysskin‘s #BloodySweet words about #ThalapathyVijaypic.twitter.com/wJIOQKVP1p
— VCD (@VCDtweets) March 3, 2023
இந்நிலையில், தற்போது ஒரு பொது நிகழ்ச்சியின் மேடையில் இயக்குநர் மிஷ்கின் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், மிஷ்கின் விஜய்யுடன் ஆக்சன் காட்சிகளில் நடித்த அனுபவம் மற்றும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.
அதில்,”சண்டை காட்சிகளில் படமாக்கி கொண்டிருந்தபோது, விஜய் தன்னை மிகவும் கவனமாக அடித்து வந்தார். மிகவும் கேரிங் உடன் செயல்பட்டார். நான் உடனே, இல்லை விஜய், நீங்கள் வழக்கம்போல் சண்டை காட்சிகளில் நடியுங்கள். எனக்கும், இந்த சண்டை குறித்தும், தற்காப்பு கலை குறித்தும் சில புரிதல் இருக்கிறது என்றேன். படப்பிடிப்பை முடித்துவிட்டு, விஜய் என்னிடம் ஓடிவந்து, ஒன்றும் ஆகவில்லையே என கூறினார். அதனால், அவர் நிஜ ஹீரோவாக உள்ளார்” என பாராட்டியிருந்தார்.